ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட எல்லைகள் வழியாக சென்னைக்கு கனிமங்கள் கொண்டு வரும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு

பதிவு:2023-02-11 18:19:41



ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட எல்லைகள் வழியாக சென்னைக்கு கனிமங்கள் கொண்டு வரும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு

ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட எல்லைகள் வழியாக சென்னைக்கு கனிமங்கள் கொண்டு வரும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு

திருவள்ளூர் பிப் 11 : திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் விபத்துக்கள் லாரிகளில் அதிக பாரம் ஏற்ற அனுமதிப்பது. ஜிஎஸ்டி முறைகேடு .அரசுக்கு வருவாய் இழப்பு. சுற்றுச்சூழல் பங்கம் விளைவிக்கும் ஆந்திர மாநிலத்தில் இருந்து எந்த அனுமதியும் இல்லாமல் கனிம வளங்களை திருவள்ளூர் மாவட்ட எல்லைகள் வழியாக சென்னைக்கு கொண்டு வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் அதை தொடர்ந்து பேசிய எம் சாண்ட் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ். திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, அரிசி உள்ளிட்டவைகள் நடைபெறுவதாகவும் வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருப்பதாகவும் ஆந்திராவிலிருந்து அதிக பாரங்கள் ஏற்றிக்கொண்டு ஜிஎஸ்டி பில் இல்லாமல் எந்த ஒரு ஆவணங்கள் இல்லாமல் கனிம வளங்கள் சென்னைக்குள் வருவதாகவும் கே பி பார்க் போன்ற கட்டிடங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கும்மிடிப்பூண்டி அருகே ஒருங்கிணைந்த அதிநவீன சோதனைச் சாவடி பயன்பாடு அற்று செயல்படுவதாகவும் சக்திவேடு ஊத்துக்கோட்டை கனகம்மா சத்திரம் பொன் பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள் வழியாகவே திருவள்ளூர் மாவட்ட எல்லைகளுக்குல் வருவதும் திருவள்ளூரில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்வதும் நடைபெறுவதாகவும் உடனடியாக தடுக்கப்படவில்லை என்றால் வரும் காலங்களில் சென்னையில் இருக்கக்கூடிய கட்டிடங்கள் சிறிய பூகம்பம் வந்தால் கூட இடிந்து விழக் கூடிய அபாயம் உள்ளது.

ஏற்கனவே மணல் தட்டுப்பாடு தரமற்ற எம் சாண்ட் தமிழ்நாட்டில் நான்காயிரம் எம் சாண்ட் கிரஷரில் 500 கிரஷர்களுக்கு கூட அனுமதி இல்லை எனவும் தரமற்ற எம்சாண்ட் தயாரிப்பதாகவும் தரமற்ற கான்கிரீட் தயாரிப்பதாகவும் அதை மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி மட்டும் பெற்றுவிட்டு நடத்தப்படுவதாகவும் பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து அதிக பாரம் ஏற்ற கூடாது என முடிவெடுத்துள்ளதாகவும் இதில் 90 சதவீத லாரி உரிமையாளர்கள் உள்ளதாகவும் தற்போது ஆந்திராவில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மட்டுமே அதிக பாரம் இயற்றி வருவதாகவும் அதை தடுத்து நிறுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடுக்காத பட்சத்தில் தவறு செய்யாத லாரி உரிமையாளர்கள் ஆந்திராவை நோக்கி நடைப்பயணம் செல்ல உள்ளதாகவும் தற்போது அளித்துள்ள புகாரில் ஒரு மாதம் எஸ் பி நேரில் சோதனைச் சாவடிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்டத்தில் பணம் மட்டும் கொடுத்தால் அதிகாரிகள் எந்த தவறு செய்யும் தயாராக உள்ளதாகவும் ஒரு மாதம் வரை காத்திருப்பதாகவும் அதற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முறையாக அனுமதி கடிதம் அளித்து ஆந்திராவை நோக்கி நடைபயணம் செல்ல உள்ளதாக தெரிவித்தார்.