திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் திருக்கோயிலில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம்

பதிவு:2023-02-11 18:22:15

திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் திருக்கோயிலில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம்

திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் திருக்கோயிலில் 108 பால்குடம்  ஊர்வலம் மற்றும் அபிஷேகம்

திருவள்ளூர் பிப் 11 : திருவள்ளூரில் உள்ள கிராம தேவதையான வேம்புலி அம்மன் திருக்கோவிலில் அருள்மிகு வேம்புலி அம்மன் சேவா சங்கம் சார்பில் 108 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

ஈஸ்வரன் கோவிலில் இருந்து 108 பால் குடங்களுடன் புறப்பட்ட ஊர்வலம் பஜார் வீதி வடக்கு ராஜ வீதி, தேரடி, காக்களூர் சாலை வழியாக வேம்புலி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து வேம்புலி அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், வேம்புலி அம்மன் சேவா சங்கம், மற்றும் கிராமத்தார் கிராம பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

இந்த பால்குட ஊர்வலத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்