பதிவு:2023-02-12 22:45:41
புல்லரம்பாக்கம் கிராமத்தில் ஜெயா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி
திருவள்ளூர் பிப் 11 : ஜெயா வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திருவள்ளூர் வட்டாரத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியின் துவக்க விழா திரெளபதி அம்மன் கோவில், புல்லரம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
வேளாண் உதவி அலுவலர் திவ்யபாரதி மற்றும் கல்லூரி முதல்வர் எம்.வி.அரங்கசுவாமி, உதவிப் பேராசிரியர் ஆர். நீலமேகம் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் பி.சக்திவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் டி.எம்.தமிழ்வாணன்,வேளாண் உதவி இயக்குநர் ஸ்ரீ சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்சசியில் மண் மாதிரி சேகரிப்பது குறித்தும் விதை நேர்த்தி செய்வது குறித்தும் ஜெயா வேளாண்க் கல்லூரி மாணவர்கள் அரவிந்தன் மற்றும் கோகுல்ராஜ் செய்து காண்பித்தனர். இதில் திருவள்ளூர் வட்டாரத்தை சேர்ந்த வேளாண் பெருங்குடி மக்கள் மற்றும் ஜெயா வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் ஆனந்தராஜ், அரவிந்தன், பத்ரிநாதன், பாலமுருகன், பாரதி கண்ணன், பூபேஸ் ராஜன், திவ்யேஸ், கோகுல் மற்றும் கோகுல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.