பதிவு:2023-02-15 09:48:37
திருவள்ளூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டு பயிற்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் வட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக புதிய எற்றுமதியாளர்களை உருவாக்கி, விளைபொருள் வாரியாக தரங்களை வரையறுத்து, ஏற்றுமதி நிறுவனங்களை ஆய்வு செய்து சான்று வழங்கி வரும் “வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்"(APEDA) துவங்கப்பட்டு இன்று 37-வது நிறுவன தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுக்கான ஏற்றுமதி, இறக்குமதி மேம்பாட்டு பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் எஸ்.நடராஜன் முன்னிலையில் துவக்கி வைத்து பேசினார்.
வேளாண் மற்றும் பதபடுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் டிசம்பர் 1985-ம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தினால் அமைக்கபட்ட நிறுவனம் ஆகும். டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாட்டின் சென்னை உட்பட 14 இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் பிப்ரவரி-13 “வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்” (APEDA) நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. 37-வது நிறுவன நாளை கொண்டாடும் விதமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிலை மற்றும் விவசாயிகள் தொழில் முனைவோர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வேளாண் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நம் மாவட்டத்தில் நெல், வேர்கடலை, பச்சைபயிர், காய்கறி மற்றும் பழவகைகள் 1L Ha அதிகமாக பயிரிடப்படுவதும் சென்னை துறைமுகம் நமது அருகாமையில் இருப்பதும் மிக சாதகமான சூழ்நிலை ஆகும். ஏற்கனவே 20-க்கு மேம்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் நமது மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.புதிய ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கவும், எற்றுமதியாளர்களுக்கு திருவள்ளுர் மாவட்ட விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிலை மூலம் தரமான விளை பொருட்களை வழங்குவதும் ஒரு இலாபமான வர்த்தகமாக இருக்கும். சிறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கான தீவிர வழிமுறை ஆகும்.
புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதும், விளைபொருள் வாரியாக தரங்களை வரையறுப்பதும், ஏற்றுமதி நிறுவனங்களை ஆய்வு செய்து சான்று வழங்குதலும் “வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் நோக்கமாகும். 2021-2022-ம் ஆண்டு மொத்த ஏற்றுமதி மதிப்பில் 49.5 சதவிகிதம் APEDA -வின் MANDATE PRODUCTS ஆகும். இதில் தானியங்கள் ஏற்றுமதி 52 சதவிகிதம் இருப்பது குறிப்பிடத்தக்கது. புவிசார் குறியீட்டு பொருட்கள் 150-க்கு மேற்பட்டவை APEDA -வின் MANDATE PRODUCTS ஆகும். வேளாண் விலைபொருள் ஆகும். மலேசியா, வியட்நாம், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் மற்றுமின்றி அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் இந்திய வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல சந்தை உள்ளதை விவசாயிகளுக்கு, உழவர் உற்பத்தியாளர் நிலைகளும் சிறுகுறு தொழில் முனைவோரும், ஏற்றுமதியாளர்களும் பயன்படுத்தி மேம்படைய வேண்டும்.
ஏற்றுமதியாளர்கள் வாகன போக்குவரத்து, இருபொருள் SUPPLY செய்யும் விவசாயிகளுக்கு மாவட்ட நிறுவனம் சார்பில் வங்கி கடன் பெற்று தருதல். பிற திட்டங்கள் ஒருங்கிணைந்து போன்ற எல்லா வித உதவிகளும் செய்யப்படும் என இத்தருணத்தில் தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சியில் ஏற்றுமதிக்கு சம்மந்தப்பட்ட அனைத்து துறைகளில் இருந்தும் கலந்துகொண்டுள்ள தொழில்நுட்ப வல்லுனர்களின் பயிற்சியில் விவசாயிகளும், உழவர் உற்பத்தியாளர் நிலைகளும் தொழில் முனைவோரும் முழு ஈடுபாட்டுடன் பங்குபெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மூன்று விவசாயிகளுக்கு ரூ.4.71 இலட்சம் மதிப்பீட்டிலான பொருளீட்டு கடன் பெறுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முன்னிலையில் வழங்கியும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு பொருள்களுக்கான கண்காட்சி அரங்குகளையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் முன்னிலையில் பார்வையிட்டார்.
இதில் வெளிநாடு ஏற்றுமதி உதவி இயக்குநர் தளபதி ராம்குமார், பயிர் பாதுகாப்பு அலுவலர் ஜி.எஸ்.கிரி, இணை இயக்குநர் (வேளாண்மை) சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், துணை இயக்குநர் பொன் குமார், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் இராஜேஸ்வரி, துணை இயக்குனர் (தோட்டக்கலை துறை) ஜெபக்குமாரி அனி, உதவி மேலாளர் முத்தையா, தொழில்நுட்ப உதவியாளர் கீர்த்தனா, வேளாண் அலுவலர் முபாரக், உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தினர், விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.