பதிவு:2022-04-23 16:34:38
திருவள்ளூரில் அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் தமிழன் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி
:திருவள்ளூர் ஏப் 23 : திருவள்ளூரில் அமைச்சூர் ஆணழகன் சங்கம் மற்றும் தமிழன் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூடம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்ட அமைச்சூர் ஆணழகன் சங்கம் ஜூனியர்,சீனியர்,மேன் பிசிக் physiic உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.போட்டியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 200 க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொண்டனர்.
ஆணழகன் போட்டியில் தங்களது கட்டமைப்பான உடல்களை பல்வேறு வடிவங்களில் காண்பித்து தங்களது திறமைகளை வெளி காட்டினார்கள் இதில் சிறந்த திருவள்ளூர் மாவட்ட ஆணழகன்,ஹரிஷ் ஆகியோர் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
முதல் இடம் பிடித்தவருக்கு பிரிட்ஜ் இரண்டாமிடம் பிடித்தவருக்கு ஃபேன் மூன்று இடம் பிடித்தவருக்கு குக்கர் ஆகிய இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு அர்ஜுனா விருது பெற்ற மிஸ்டர் வேர்ல்ட் பாஸ்கரன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் மகா ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களையும் பாராட்டுசான்றுகளையும் வழங்கி கௌரவித்தனர்.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் சூர்யா உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழன் ஃபிட்னஸ் உடற்பயிற்சி கூட நிறுவனர் தமிழன் செய்திருந்தார்.