பதிவு:2023-02-15 10:04:13
ஆர்.கே பேட்டை அடுத்த ஆதி வராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரிடம் 2 லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றுவதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக காவலர் மற்றும் அவரது தாயார் மீது இளைஞர் புகார்
திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே பேட்டை வட்டம் ஆதிவராகபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ்குமார்(34).அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜமுனா. இவரது மகன்கள் ஜெயப்பிரகாஷ், லோகநாதன், பிரசாந்த். இந்நிலையில் ஜமுனாவின் மகன் பிரசாந்த்தை காவலர் பணிக்கு அனுப்ப செலவுக்கு இரண்டு லட்ச ரூபாய் தேவைப்படுவதாக சதீஷ்குமாரிடம் ஜமுனா என்பவர் கடனாக வாங்கி அதற்கு பத்திரம் எழுதிக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் சென்றார்.
ஆனால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பணம் தர முடியாது என்றும், அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் சதீஷ்குமாரின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் காவலர் பிரசாந்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூபாய் 2 லட்சம் காவலர் பிரசாந்த் பெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் டெலிபோன் உரையாடல் ஆடியோ ஆகியவை மூலமாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தை திருப்பி தராமல் இருப்பதுடன் பிரசாந்த் போலீசாக இருப்பதால் என்னிடம் பெற்ற ரூபாய் இரண்டு லட்சத்தை தர மறுப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதும், தன்னை தொடர்ந்து மிரட்டி வருவதாலும் இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடுத்த பணம் ரூபாய் 2 லட்சத்தை பெற்று தர வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி அலுவலகத்தில் உறுதி அளித்ததால் பாதிக்கப்பட்ட சதீஷ்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.