திருவள்ளூர் அருகே என்ஜின் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில் நடுவழியில் அருகே நிறுத்தம் : மாற்று ரயிலில் செல்வதற்காக திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற பயணிகள் : பொது மக்கள் கடும் அவதி

பதிவு:2023-02-15 10:12:50

திருவள்ளூர் பிப் 15 : அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு 11.20 மணியளவில் புறநகர் மின்சார ரயில் புறப்பட்டது. அந்த ரயிலானது திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே வந்த போது என்ஜின் கோளாறு காரணமாக தீடீரென நிறுத்தப்பட்டது. அதனால் ரயிலில் பயணித்த பயணிகளை இறக்கிவிட்டனர்.

ரயில் நிலையத்தில் வண்டி நிற்காமல் பாதிவழியில் நின்றதால் அதிலிருந்த பயணிகள், வயதானவர்கள், குழந்தைகள் வெயில் நேரத்தில் தண்டவாளத்தில் நடந்து திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு சென்றனர். அதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து ரயில் என்ஜின் கோளாறை சரி செய்தனர்.

45 நிமிடம் கழித்து கோளாறை சரி செய்தனர். அதனையடுத்து 12.15 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்றது. இதனால் அந்த புறநகர் ரயிலில் பயணித்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.