ஆன்மீக விழிப்புணர்வு உதையும் வெல்பர் பவுண்டேஷன் முன்னெடுப்பில் அறிவிப்பு பலகை திறப்பு விழா

பதிவு:2022-04-24 10:42:39



கீழ் நல்லாத்தூரில் மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அறிவுத்திறனை வளர்க்க அறிவுபலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது

ஆன்மீக விழிப்புணர்வு உதையும் வெல்பர்  பவுண்டேஷன்  முன்னெடுப்பில் அறிவிப்பு பலகை திறப்பு விழா

திருவள்ளூர் ஏப்ரல் 24, அறம் பொருள் இன்பம் என்னும் முப்பெரும் பிரிவுகளாக பிரித்தும் அழகுடன் இணைத்தும் தமிழக மக்களின் வாழ்வில் உயிராய் கலந்து காலத்தால் அழியாமல் தமிழர்களின் இதயங்களில் திருக்குறள் நிலைத்து கொண்டிருக்கிறது,

இதனை மாணவர்கள் கிராமப்புற மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்ஃபேர் பவுண்டேஷன் சார்பில் திருக்குறள் அறிவுபலகை திறக்கப்பட்டு வருகிறது

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி எதிரே மாணவர்கள் ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திருக்குறள் அறிவுபலகை திறப்பு விழா நிகழ்ச்சி தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் சுபாஷ் ஜீ தலைமையில் நடைபெற்றது

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் எம்.தேவதாஸ், ஒன்றிய கவுன்சிலர் நரேஷ்குமார், கீழ்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரந்தாமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு திருக்குறள் அறிவுபலகையை திறந்து வைத்தனர்,

மேலும் ஊராட்சி நிர்வாகிகள் கூறும்போது திருக்குறள் அறிவு பலகையில் நாள்தோறும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு திருக்குறளுக்கான விளக்கமும் எழுதப்படுவதால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் அறிவுத்திறனை வளர்த்து அவர்களின் வாழ்வியலை நல்வழிப் படுத்தவும் இது உதவும் என பெருமிதம் தெரிவித்தனர்

முன்னதாக அறிவுபலகை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டதுடன் திருக்குறளும் அதன் விளக்கமும் என்ற புத்தகம் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது

இந்நிகழ்வில் தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்ஃபேர் பவுண்டேஷன் நிர்வாகிகள் டாக்டர் தேவா, சங்கர், கார்த்திக், பூபதி, தினேஷ் மற்றும் கீழ்நல்லாத்தூர் ஊராட்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்