பதிவு:2023-02-15 10:19:41
மஹா சிவராத்திரியை முன்னிட்டு நகரியில் பிரண்டை, வில்வ இலை, ஊமத்தை இலை, வில்வக்காய் கொண்டு 9 அடி உயரத்தில் கஜ சம்ஹாரமூர்த்தி விக்ரஹம், 30 அடி உயரத்தில் சிவன் சிலை வடிவமைப்பு பணிகள்
திருவள்ளூர் பிப் 15 : தமிழக ஆந்திர எல்லையோர பகுதியான நகரி கீளப்பட்டில் சிறப்பு பெற்ற திரிபுரசுந்தரி சமேத சந்திர மெளலீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவப்பெருமானின் பல்வேறு வகையான தோற்றங்கள் சிலை வடிவமைக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி வரு 18-ம் தேதி மஹா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ள நிலையில், திருக்கோயில் நாகதீர்த்தம் திருக்குளத்தில் கணேஷ் என்ற இளைஞர் சக நண்பர்களுடன் இணைந்து சிவபெருமான் அவதாரங்களில் ஒன்றான கஜ சம்ஹாரமூர்த்தி (யானையை அடக்கி ஆள்வது) அவதாரத்தில் காட்சி தருவது போன்று சிலையை வடிவமைக்க 1500 பிரண்டை, வில்வ இலை, ஊமத்தை இலை, அருகம்புல், ருத்ராட்சை, வில்வகாயினால் 9 அடி உயரத்தில் கஜ சம்ஹாரமூர்த்திக்கு சிலை வடிவமைக்கப்பட்டு வருகின்றது. ஆலய முகப்பு பகுதியில் சங்கினால் 30 அடி உயரத்தில் தியான சிவன் சிலை அமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
கடந்த 27 நாட்களாக 5 இளைஞர்கள் 9 அடி உயரம் கொண்ட கஜ சம்ஹாரமூத்தி, 30 அடி உயரத்தில் தியான சிவன் சிலைகள் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக திருக்கோயில் நிர்வாகி சுப்பிரமணியம் சுவாமிகள் தெரிவித்தார்.