பட்டாபிராம் இந்து கல்லூரியில் மாபெரும் தமிழக் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2023-02-18 08:44:57



பட்டாபிராம் இந்து கல்லூரியில் மாபெரும் தமிழக் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பட்டாபிராம் இந்து கல்லூரியில் மாபெரும் தமிழக் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி :  மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் பிப் 17 : திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும், இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு செல்வதற்கு ஏதுவாக நடைபெறும் மாபெரும் தமிழக் கனவு என்ற பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.

தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் பெருமையையும், சமூக விழிப்புணர்வையும், பொருளாதார முன்னேற்றம் குறித்த வாய்ப்புகளையும், இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு முழுமையாக கடத்துவது குறித்து மாபெரும் தமிழக்; கனவு என்னும் இந்த பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தாங்கள் உணர்ந்ததை அடுத்து வரும் சந்ததியினருக்குக் கொண்டு செல்ல முடியும். இதனால் விழிப்புணர்வுள்ள சமூகம் உருவாகும்.

நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு குறிப்பாகக் கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவதென்பது ஆரோக்கியமான எதிர்காலச் சமூகக் கட்டமைப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள 100 கல்லூரிகளில் தமிழர் மரபும் நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவுக்கான முன்னெடுப்புகள் மற்றும் வாய்ப்புகள், கல்விப் புரட்சி மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் அதனை; செயல்படுத்தும் முறைகள் முதலிய தலைப்புகளின் கீழ் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு மாபெரும் தமி;ழ்க் கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த தமிழ்க்கனவு என்ற நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள மாணவர்களுக்கும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நூலும், தமிழ்ப் பெருமிதம் குறித்த குறிப்பேடும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் தவறாமல் படித்துப் பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அல்லது மூன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான மாபெரும் தமி;ழ்க் கனவு என்ற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைக்கு திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி. இந்து கல்லூரியில் தான் இந்த தமிழ்க்கனவு என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சிக்கரமான விஷயமாக கருதுகிறேன். இந்த தமிழ்க் கனவு திட்டத்தைப் பொறுத்தவரை இந்த கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல பல்வேறு கல்லூரிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும் வருகை தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் இந்த மாபெரும் தமிழ்க் கனவு என்ற நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்டுருக்கக் கூடிய கையேடு மற்றும் இன்றைக்கு வந்திருக்கக் கூடிய சிந்தனையாளர்களுடைய கருத்துக்கள் அனைத்தும் வாழ்க்கையில் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அரசின் பல்வேறு துறைகள் சார்பாக மாணவ, மாணவியர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி, கல்விக்கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி, சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளையும், மாபெரும் தமிழ் கனவு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்ட காணொளியையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சந்தத் தமிழும் சங்கத் தமிழும் என்ற தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர் யுகபாரதி,விடுதலைப் போரில் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உரையாற்றினர்.

இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, இந்து கல்லூரி முதல்வர் க.கல்விக்கரசி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.