பதிவு:2023-02-18 08:51:01
திருத்தணி அருகே 30 அடி உயரம் கொண்ட ரயில்வே சுரங்கப்பாதை மேலே இருந்து சாலையில் குதித்ததில் பலத்த காயம் அடைந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
திருவள்ளூர் பிப் 17 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள 30 அடி உயரம் கொண்ட ரயில்வே சுரங்கப்பாதை மேல் இருந்து பெண் ஒருவர் சாலையில் கீழே குதித்ததில் கால் மற்றும் தலையில் பலத்து காயம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திருத்தணி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (52) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினால் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே சுரங்கப்பாதை மேல் பகுதியில் இருந்து தற்கொலை செய்த சம்பவம் பைபாஸ் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.