முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்குதல் சைனிக் பள்ளியில் பயின்று வரும் சிறார்களுக்கு ஊக்கத்தொகை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-02-18 08:53:47

திருவள்ளூர் பிப் 17 : தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவி (கல்வி உதவி தொகை) பள்ளி படிப்பிற்கு 2022-23-ம் கல்வி ஆண்டிலிருந்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2000 6 முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.4000 9 மற்றும் 10-ம் வகுப்பு ரூ.5000 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு ரூ.6000 என உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், IITs IIMs மற்றும் National Law Schoo-ல் பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 2022-23 கல்வியாண்டு முதல் ஆண்டொன்றிற்கு ரூ.50,000 ஊக்கத் தொகையும், சைனிக் பள்ளியில் பயின்று வரும் முன்னாள் படைவீரர் சிறார்களுக்கு 2022-23ம் கல்வியாண்டு முதல் ஆண்டொன்றுக்கு ரூ.25000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும் இவ்வூக்கத்தொகை பெறும் சிறார்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகையும் வழங்கப்படும்.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்,சார்ந்தோர்கள் இந்த அரிய வாய்ப்புகளை பயன்படுத்தி அதிக அளவில் பயன்பெறுமாறும்,இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு திருவள்ளூரில் இயங்கும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 044-29595311 வாயிலாகவோ தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து அளித்து பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.