பதிவு:2023-02-18 08:55:39
திருவள்ளூர் மாவட்டத்தில் போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்தோரைச் சார்ந்தோர் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு தொகுப்பு நிதி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் பிப் 17 : போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் உயிரிழந்த படைவீரர்களின் மனைவி,பெற்றோர்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த தொகுப்பு நிதி கருணைத் தொகையானது 23.09.2022 முதல் ரூ.2,00,000 ஆகவும், போர் மற்றும் போரையொத்த நடவடிக்கைகளில் ஊனமுற்ற முன்னாள் படைவீரர்களுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகையானது ரூ.1,00,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு திருவள்ளுரில் இயங்கும் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண். 044-29595311 வாயிலாகவோ தொடர்பு கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய முன்னாள் படைவீரர், சார்ந்தோர் பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.