பதிவு:2023-02-20 23:15:01
திருவள்ளூர் அடுத்த லட்சுமிபுரத்தில் அரசுப் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி விபத்து : 10 பேர் காயம் : 2 பேருக்கு பலத்த காயம்
திருவள்ளூர் பிப் 20 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் 97 என்ற அரசு பேருந்து காலை 9 மணியளவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. 90 பயணிகளை ஏற்றிக்கொண்டு லட்சுமிபுரம் என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பேருந்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி அரசுப் பேருந்தின் பின்புறம் பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் பின்புற சீட்டில் அமர்நதிருந்த 10 பேருக்கு இலேசான காயமும், திருத்தணியை சேர்ந்த குமுதன் (34), ஆற்காடு குப்பத்தைச் சேர்ந்த ஆசிரியர் (60) ஓங்காரம் ஆகிய 2 பேருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது.
பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.