மணவாள நகர் கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 25 ம் தேதி நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-02-20 23:16:55

திருவள்ளூர் பிப் 20 : தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளுர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டில் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கே.இ.என்.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 25.02.2023 அன்று காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் வழங்கக் கூடிய முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துக்கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளனர். இம்முகாமிற்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 8, 10, 12, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, பி.இ, பட்டயப்படிப்பு, ஓட்டுநர் பயிற்சி முடித்தவர்கள், டெய்லரிங் தொழில் கல்வி பயின்ற ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய வயது, கல்வித் தகுதி முதலான முக்கிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு, இணை இயக்குநர், திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளூர் மாவட்டம், தொலைபேசி எண் - 044 – 27664528 மற்றும் உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருவள்ளூர், தொலைபேசி எண். 044–27660250 ஆகிய முகவரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.