ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2023-02-24 18:44:17



ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் விடுதிகளில் தங்கி பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்திட தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டும் மைய உதவி இயக்குநருடன் ஆலோசிக்கப்பட்டு பள்ளிகளில் பயின்று வரும் விடுதி மாணவ, மாணவியர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்புகளும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கட்டமாக பயிற்சி வகுப்பும் என பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டது. அதன்படி இன்று திருவள்ளுர் ஸ்ரீ நிகேதன் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும், திருவள்ளூர், பூவை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கும் இப்பயிற்சி வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளை அனைவரும் முழுமையாக பயன்படு;த்தி பயனடைய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் விடுதிகளில் தங்கி பயிலும்; மாணவ, மாணவியர்களான நீங்கள் நன்றாக படித்தால் தான் உங்களின் வாழ்க்கைத்தரம் மேன்மையடையும் என்பதை கருத்தில் கொண்டு படிக்க வேண்டும். நீங்கள் விடுதிகளில் தங்கி பயிலுவதன் மூலம் படிப்பதற்கு அதிகம் நேரம் கிடைக்கிறது. எனவே, அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி. குணசேகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கா விஜயா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவீந்திரன், தொழில் ஆலோசகர் பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு இளம் தொழில் வல்லுநர் சினேகாசாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.