கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு திருவள்ளூரில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பதிவு:2023-02-24 18:50:13

திருவள்ளூர் பிப் 24 : கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓ பன்னீர் தர பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளது.இதனை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் அவைத்தலைவர் சிற்றம் சீனிவாசன் தலைமையில் பேரம்பாக்கம் பகுதியில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல் இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளரும், பெருமாள்பட்டு ஊராட்சி மன்றத் தலைவருமான சீனிவாசன் தலைமையில் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல் இந்த தீர்ப்பை கொண்டாடும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா அறிவுறுத்தலின் பேரில் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் நிர்வாகிகள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் இன்ப நாதன் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பட்டாபி, திருவள்ளூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் ஞானகுமார், பட்டறை வி.கோடீஸ்வரன், சந்திரன் நாயுடு உள்ளிட்ட கிளைச் செயலாளர்கள் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.