திருவள்ளூர் அடுத்த நேமம் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வாஸ்து யோக ஆஞ்சசேய ஸ்வாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

பதிவு:2023-02-24 18:56:50



திருவள்ளூர் அடுத்த நேமம் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வாஸ்து யோக ஆஞ்சசேய ஸ்வாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் அடுத்த நேமம் ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வாஸ்து யோக ஆஞ்சசேய ஸ்வாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் அடுத்த நேமம் ஏரிக்கரை ஓரம் அமைந்துள்ளது ஸ்ரீ பஞ்சமுக வாஸ்து யோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.ராம பக்த சிரோன்மணி, சொல்லின் செல்வன் மகாவீர்யன் பக்தர்களின் தோஷங்கள் நீங்கி ராமபிரானின் திருவருளால் சந்தோஷம் நல்கும் ஸ்ரீ ராம தூதனான அனுமான் நேமம் கிராமத்தில் ஏரிக்கரையின் மீது ஸ்ரீ பஞ்சமுக வாஸ்து யோக ஆஞ்சநேயர் எனும் திருநாமத்துடன் பக்தர்களையும் நேரம் கிராமத்தையும் அருள் பாலித்து வருகிறார்.

இத்திருக்கோயிலில் கடந்த ஐப்பசி மாதம் பாலாலயம் செய்யப்பட்டு கோவிலை புணருத்தாரணம் செய்து விமானம் மற்றும் ஆலயத்திற்கு வர்ணம் தீட்டி திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 21-ஆம் தேதி வாஸ்து ஹோமம், தீர்த்த பிரசாத வினியோகம், யாகசாலை நிர்மாணம் முதல் காலம் பூர்த்தியும் நடைபெற்றது

அதனை தொடர்ந்து மாலை இரண்டாம் கால பூர்த்தி நடைபெற்றது.அதனை தொடர்ந்து நேற்று அஷ்டபந்தனம் சாட்டுதல் பிரசாத வினியோகம் மற்றும் மூன்றாம் காலப்பூர்த்தியும் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து இன்று விஸ்வரூபம் கோ பூஜை கும்ப ஆராதனை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ழ்ஏற்பாடுகளை எஸ்.நரசிம்ம பட்டாசாரியார், ராஜகோபால பட்டாசாரியார் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.