கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா மேஜிக் ஆய்வகம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து ஆய்வு :

பதிவு:2022-04-25 14:25:24



கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா மேஜிக் ஆய்வகம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து ஆய்வு :

கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா மேஜிக் ஆய்வகம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்து ஆய்வு :

திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள கதா மேஜிக் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து, பார்வையிட்டு, ஆய்வு செய்து பேசினார்.

அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தால் கூட தன்னார்வலர் நிறுவனங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது.அதில் ஒரு படியாகத்தான் கதா என்ற தன்னார்வ அமைப்பு நமது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து; தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எளிதில் புரிந்து கொண்டு கல்வி கற்பதற்கு ஏதுவாக இந்த கதா மேஜிக் ஆய்வகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி சரியான முறையில் கிடைத்தால் மட்டும் தான், அவர்கள் நடுநிலைப் பள்ளிக்கும்,மேல்நிலைப் பள்ளிக்கும், மேல்படிப்புக்கும் போகும் போது சரியான முறையில் கல்வி கற்க முடியும். அந்த ஒரு நோக்கத்துடன் கதைகள் சொல்லிக் கொடுத்து, கதைகள் வழியாக பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இன்றைக்கு கதா மேஜிக் ஆய்வகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே கதா மேஜிக் லேப் என்பது நம் திருவள்ளூர் மாவட்டத்தில் கதா தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இங்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு பகுதியில் ஆரம்பித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயமாக கருதுகிறேன் என்று ஆட்சியர் கூறினார்.

இவ்வாய்வின் போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தர்மராஜ்,கதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ கீதா தர்மராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ப.அ.ஆறுமுகம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரவி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.