திருவள்ளூர் அடுத்த சிறுவானூரில் வாகன சோதனையில் 280 கிராம் கஞ்சா பறிமுதல் : 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது

பதிவு:2023-02-27 14:49:16



திருவள்ளூர் அடுத்த சிறுவானூரில் வாகன சோதனையில் 280 கிராம் கஞ்சா பறிமுதல் : 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது

திருவள்ளூர் அடுத்த சிறுவானூரில் வாகன சோதனையில் 280 கிராம் கஞ்சா பறிமுதல் : 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது

திருவள்ளூர் பிப் 27 : திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தலைமைக் காவலர்கள் ராஜசேகர், அந்தோனி ஆகியோர் சிறுவானூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் போலீசாரைக் கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு அருகிலுள்ள பம்பு செட்டுக்குள் சென்றனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட தொடர் விசாரணையில் அந்த 3 பேரில் திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் நவீன்குமார் (24). பாலு மகன் ஜோசப் (19) என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த இளைஞர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது, அதில் 280 கிராம் கஞ்சா மற்றும் 30 சென்டி மீட்டர் நீளமுடைய புகைப்பிடிக்கும் கருவி, கஞ்சா புகைக்க உபயோகப்படுத்தும் பாட்டில் ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை கடத்தி வந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், நவீன்குமார் மற்றும் ஜோசப் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.