பதிவு:2023-02-27 14:50:40
கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் திருத்தணியில் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் பிப் 27 : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் பிரபு திமுகவைச் சேர்ந்த பிரமுகர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்து அனைத்து தரப்பு மக்களும் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருத்தணியில் நாள் முப்படை வீரர்கள் நல சங்கம் சார்பில் இந்த படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முப்படையைச்சேர்ந்த வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது திமுக பிரமுகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.