திருத்தணி அடுத்த என்.என் கண்டிகை பகுதியில் 16 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை

பதிவு:2023-02-28 23:00:20

திருவள்ளூர் பிப் 28 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த என்.என். கண்டிகையில் உள்ள கூவம் ஆற்று தரைப்பாலம் வழியாக நெமிலி, சிவாடா, நல்லாட்டூர், தாழவேடு, வேலஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆந்திராவுக்கும் அதே போல் ஆந்திராவில் இருந்து இந்த கிராமங்களுக்கும் வந்து செல்ல வேண்டும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த புயல், மழை காரணமாக ஆந்திர மாநிலம் அம்மம் பள்ளி அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பாலம் அடித்து செல்லப்பட்டது.

இதனால் போக்குவரத்துக்கு எதுவாக சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்தாண்டு பெய்த மாண்டஸ் புயலில் சீரமைக்கப்பட்ட சாலையும் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதற்கு மாற்று பாதை இல்லாததால் என். என் கண்டிகை பகுதியில் உள்ள கூவம் ஆற்று தரைபாலத்தை மேம்பாலமாக உயர்த்தி கட்டி தர வேண்டும் என விடுத்த கோரிக்கையை ஏற்று 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியது.

ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் போக்குவரத்துக்கு சிரமமாக இருப்பதாகவும் உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் விடியா திமுக அரசுக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.