திமுக பிரமுகரின் தூண்டுதலால் நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேறு கிராமத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை :

பதிவு:2022-04-25 13:55:13

திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வசதிக்காக திருவாலங்காடு ஒன்றியம் ஒரத்தூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை கொள்ளப்பட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்துள்ளனர்.

ஆனால் திருவாலங்காடு திமுக ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் என்பவர் ஒரத்தூர் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம் வராமல் தடுத்து அவர் வசிக்கும் பகுதியான சின்னமண்டலி கிராமத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் தமிழழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதால் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சென்றனர்