திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு கிளை வங்கிகளில் லோன் மேளா நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-02-28 23:03:58

திருவள்ளூர் பிப் 28 : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை-8 (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை-5 மூலமாக பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக டாப்செட்கோ 2022-2023 நிதி ஆண்டில் ரூ.300 இலட்சம் மற்றும் டாம்கோ 2022-2023 நிதி ஆண்டிற்கு ரூ.185 இலட்சம் கடனுதவி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நடைபெறவுள்ளது. அதன்படி 27.02.2023 அன்று கொரட்டூர், 01.03.2023 அன்று மாதவரம், 02.03.2023 அன்று மீஞ்சுர், 03.03.2023 அன்று மொகப்பேர், 07.03.2023 அன்று பள்ளிப்பட்டு, 08.03.2023 அன்று பட்டாபிராம், 09.03.2023 அன்று பொன்னேரி, 10.03.2023 அன்று பூந்தமல்லி,14.03.2023 அன்று போரூர், 15.03.2023 அன்று ரெட்ஹில்ஸ், 16.03.2023 அன்று திருத்தணியில் லோன் மேளா நடைபெற உள்ளது.

அதேபோல் 17.03.2023 அன்று திருவேலங்காடு, 21.03.2023 அன்று திருவள்ளூர், 22.03.2023 அன்று திருவெற்றியூர், 23.03.3023 அன்று ஊத்துக்கோட்டை, 24.03.2023 அன்று வலசரவாக்கம், 28.03.2023 அன்று வரதராஜபுரம், 29.03.2023 அன்று மணலி ஆகிய இடங்களில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இம்முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.