திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் அவசரக் கால பொத்தான்கள் குறித்து பயணிகளிடையே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால் நேரில் ஆய்வு செய்து விழிப்புணர்வு

பதிவு:2023-03-03 08:58:54

திருவள்ளூர் மார்ச் 02 : திருவள்ளுர் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகரப் போக்குவரத்து கழக பேருந்தில் நிர்பயா திட்டத்தின் மூலம் பொருத்தப்பட்டுள்ள அவசரக் கால பொத்தான்கள் குறித்து பயணிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

திருவள்ளூர் பணிமனையில் பேருந்துகளையும் தகுதி சான்று பராமரிப்பு பிரிவையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள் பார்வையிட்டு பராமரிப்பு பணிகளை மேம்படுத்துவதற்கு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.இதனையடுத்து திருவள்ளூர் பேருந்து நிலையத்தை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்து திருவள்ளூர் மாவட்டத்தில் இயக்கப்படும் 157 புறநகர் பேருந்துகள், விழுப்புரம் கோட்டம் மூலமாக இயக்கப்படும் 72 சாதாரண கட்டண பேருந்துகள், மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் 46 நகர பேருந்துகள் மற்றும் 14 சாதாரண கட்டண பேருந்துகள் அனைத்தும் தடையின்றி இயக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

பின்னர் மாநகரப் போக்குவரத்து கழக பேருந்தில் ஏறி நிர்பயா திட்டத்தின் மூலம் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அவசரக் கால பொத்தான்களை எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என பேருந்தில் இருந்த பெண் பயணிகளுக்கு விளக்கினார்.மேலும் பேருந்து நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க உரிய நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு பணிகளை துரிதமாக முடிக்க போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் எஸ்.ஜோஸப் டயஸ், திருவள்ளூர் மண்டல பொது மேலாளர் எஸ்.நெடுஞ்செழியன், கோட்ட மேலாளர் கே.ஸ்ரீதர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.