திருவள்ளூர் அடுத்த கீழானூரில் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கும் பாதை வேண்டி திருவள்ளூர் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போக்குவரத்து பாதிப்பு :

பதிவு:2023-03-03 09:02:01

திருவள்ளூர் மார்ச் 02 : சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 133 கிமீ நீளத்திற்கு 200 அடி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த திட்டம் எண்ணூர் துறைமுகத்திலிருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய உள்ளது.

இதில் ஏற்கனவே சாலைகள் உள்ள இடங்களில் சாலையை அகலபடுத்தும் பணியும் நடக்கிறது. மேலும், பொதுமக்கள் வாழும் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படாமல் சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த கீழானூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கும் வழி வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் கீழானூர் பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த வெங்கல் போலீசார் கீழானூர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.