திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ம் தேதி வரை சிறப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-03-03 09:13:58

திருவள்ளூர் மார்ச் 02 : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும்வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை (நிலை) எண் 52, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ம.அ.தி.1) துறை நாள் 25.06.2012-ன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புபணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பொருள் தொடர்பாக அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டு, இத்திட்ட வேலை அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பிரத்யேக நீலநிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக பிரதிமாதம் 2-வது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் அளவிலும் இரு மாதங்களுக்கு ஒருமுறை இரண்டாவது செவ்வாய்க்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்கள் முன்னிலையில் குறைகேள் முகாம்கள் நடத்தப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் தகுதியுடைய மற்றும் விருப்பத்தின் பேரில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி தாங்கள் வசிக்கும் பகுதியை சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் நீலநிறவேலை அட்டையினை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.