திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு : சுக்குநூறாக உடைந்த பின்பக்க கண்ணாடி : புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை :

பதிவு:2023-03-03 20:33:05

திருவள்ளூர் மார்ச் 03 : திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பேட்டையிலிருந்து திருவள்ளூர் நோக்கி டி41 ஏ என்ற அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை ஹேமநாதன் என்ற ஓட்டுனர் பேருந்தை ஓட்டி வர நடராஜன் என்ற நடத்துனரும், 39 பயணிகளும் இருந்துள்ளார்.

இந்நிலையில் திருப்பாச்சூர் என்ற கிராமம் அருகே அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கிளம்பும் போது திடீரென பேருந்தின் பின் பக்கம் கல் ஒன்று பட்டு கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து பார்த்தனர்.

இதனையடுத்து பேருந்தை ஓட்டுனர் ஹேமநாதன் புல்லரம்பாக்கம் காவல் நிலையம் அருகே நிறுத்திவிட்டு பேருந்து மீது கல்வீசி தாக்கி கண்ணாடியை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் நேற்று இளைஞர் ஒருவர் திருப்பாச்சூரில் அவர் வீட்டு முன்பு பேருந்தை நிறுத்தச் சொல்லியும், பேருந்து நிற்காமல் சென்றதால் அந்த இளைஞர் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.