பதிவு:2023-03-08 20:30:43
திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் எஸ்பிபிஆர் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணிகளை 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆய்வு செய்த பின் திருவள்ளூர் எம்பி காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதால் சர்ச்சை
திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் எஸ்பிபிஆர் நெடுஞ்சாலை விரிவாக்கம் போலிவாக்கம் மேல்நல்லாத்தூர் வெங்கத்தூர் மணவாளன் நகர் வரை4.1கிலோ மீட்டர் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளில் முறைகேடு நடப்பதாகவும் சாலை விரிவாக்கத்திற்கு தோன்றிய பள்ளம் மற்றும் மழை நீர் வடிகால் பணிக்கு தோண்டிய மண்ணை எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இதன் மூலம் ஊழல் நடைபெற்று இருப்பதாக கிராம மக்கள் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாரிடம் புகார் தெரிவித்தனர் சுமார் 50 கோடி திட்ட மதிப்பில் மந்தகதியில் பணிகளை மேற்கொண்டு வருவதை 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து ஆய்வு செய்த திருவள்ளூர் எம்பி யும் காங்கிரஸ் செயல் தலைவருமான ஜெயக்குமார் சாலை விரிவாக்கத் திற்கு தோண்டிய 8 கிலோ மீட்டர் மண் மாயம் ஆனது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சாலை விரிவாக்கம் செய்ய எடுத்த மண்ணை சட்டவிரோதமாக விற்பனை செய்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல கோடி ருபாய் மண் கொள்ளைபோனதை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் 4கிமீ நடந்தே ஆய்வு செய்த எம்பி ஜெயக்குமார் பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்து போய் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை .மழை நீர் வடிகால் அமைத்ததிலும் முறைகேடு நடந்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன் தர மற்ற முறையில் பணிகள் மேற்கொண்டுள்ளதற்கு அதிருப்தியை தெரிவித்தார்.
மேலும் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்படாமல் தனியார் நிறுவனத்திற்கு சாதமாக மக்கள் வரிப்பணத்தை வீணாக்கியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்த அவர் ஆறு மாதத்திற்குள் பணியை முடிக்க தரமான முறையில் கட்டுமானத்தை மேற்கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, திருவள்ளூர் எம்பி யும் காங்கிரஸ் செயல் தலைவருமான ஜெயக்குமார், பைத்தியக்காரர்கள் பலவற்றையும் பேசுவார்கள்.அவர்கள் ஏன் எப்படி செய்கிறார்கள் என்று என்னை கேட்டால், ஒன்று நான் பைத்தியம் ஆக வேண்டும். அல்லது பதில் சொல்லாமல் இருக்க வேண்டும்.பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றார்கள். இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எல்லாம் கொரோனா காலத்தில் பட்ட அவதியை நான் நேரில் கண்டவன் காங்கிரஸ் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் பேசும் பொழுது சற்றும் சிந்தனை இல்லாமல் அறிவிலி தனமாக உலகத்தை அறியாத மனிதராக காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தான் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கி கொடுத்து ரயிலில் அவர்களை ஏற்றி அனுப்பி கொரோனாவை பரப்பினார்கள் என்று ஒரு கோமாளித்தனமான குற்றச்சாட்டை வைத்தார் அதற்கு நான் பதில் அளித்தேன்.
உன்னைப் போன்ற பைத்தியக்காரன் போன்று கைதட்டுங்கள் என்று சொல்லவில்லை. விளக்கேற்றுங்கள் என்று சொல்லவில்லை. தட்டை தட்டுங்கள் என்று சொல்லவில்லை. கையாளாகாத பிரதம மந்திரி நீ எனவே வீட்டிலே உட்கார்ந்து கொண்டு மயிலுக்கு உணவு கொடுத்துக் கொண்டு கையை தட்டுங்கள் என்று கோமாளித்தனமாக பேசியிருக்கின்றாய். நாங்கள் இப்படி மக்களை அனுப்பியதால் அவர்கள் குறைந்தபட்சம் சாகும்பொழுதாவது உறவினர்கள் மத்தியில் இறந்தார்கள் சென்றிருந்த நேரத்தில் எல்லாவற்றையும் மூடிவிட்ட காரணத்தினால் நாய் கறியை தின்று பிழைத்தார்கள்.
இந்த கேவலமான வேலையை செய்த உங்கள் அரசு இன்று பைத்தியக்காரத்தனமாக பாஜக கட்சியை சார்ந்தவர்கள் பேசுவார்கள் தமிழ்நாட்டிலே அந்தப் பைத்தியக்காரத்தனம் தலைவிரித்து ஆடுகிறது ஏனென்றால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அந்த கட்சி பலம் பெறவில்லை அவர்கள் காசை கொடுத்து ஓட்டை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.ஒரு தேர்தலில் கூட அவர்கள் மூன்று சதவீதம் ஓட்டுகளுக்கு மேலாக வாங்க முடியாத நிலை நிலையிலே அந்த பைத்தியக்காரத்தனமான பேச்சு தொடரும் என்று கூறினார்.