திருவள்ளூர் அடுத்த திருமழிசையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம் : பூந்தமல்லி எம்எல்ஏ திறந்து வைத்தார்

பதிவு:2023-03-08 20:32:02

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட திருமழிசை பேரூராட்சி 11 வது வார்டு நெடுஞ்சேரி கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமிக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருமழிசை பேரூராட்சி தலைவர் உ.வடிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜெ.மகாதேவன் பேரூர் கழகச் செயலாளர் தி.வே.முனுசாமி, செயல் அலுவலர் தா.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 11-வது வார்டு கவுன்சிலர் லதா ஜோதி வரவேற்றார்.

இதில் பூந்தமல்லி எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த அங்கன்வாடியில் பயிலும் 25 குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து உற்சாகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி அதிகாரிகள், பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.