சென்னை மக்களின் குடிநீர்தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 150 கன அடி, செம்பரம்பாக்கத்திலிருந்து 185 கன அடி நீர் திறப்பு : நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

பதிவு:2023-03-08 20:35:45

திருவள்ளூர் மார்ச் 08 : சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளாகும். அதன்படி பூண்டி ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி.நீர் இருப்பு 2435 மில்லியன் கன அடி. புழல் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2778 மில்லியன் கன அடி. சோழவரம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 831 மில்லியன் கன அடி. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2918 மில்லியன் கன அடி. கண்ணன் கோட்டை ஏரியின் மொத்தக் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 500 மில்லியன் கன அடி.

பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.கடந்த ஆண்டு மழையின் அளவு அதிகமானது. இதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்தது. இதனையடுத்து கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோடைவெயில் ஆரம்பாக இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக 150 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. அதே போல் செம்பரம்பாக்க ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டருக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.