திருத்தணி மலைக்கோயிலில் உள்ள கடைகளுக்கு முன்பு பொது மக்கள் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய கோயில் துணை ஆணையர்

பதிவு:2023-03-08 20:44:14

திருத்தணி மலைக்கோயிலில் உள்ள கடைகளுக்கு முன்பு பொது மக்கள் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய கோயில் துணை ஆணையர்

திருத்தணி மலைக்கோயிலில் உள்ள கடைகளுக்கு முன்பு பொது மக்கள் செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்றிய கோயில் துணை ஆணையர்

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்களின் தேவைகளுக்காக டீ, டிபன், கூல்டிரிங்ஸ், மாலை கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் கோயில் நிர்வாக அனுமதியுடன் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடையில் வைத்திருக்கும் பொருட்களுடன் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து கேஸ் ஸ்டவ், கூல்டிரிங்க்ஸ் ஃபிரிட்ஜ், டேபிள், சேர் ஆகியவற்றை போட்டு வைத்திருப்பதால் நடந்து செல்ல சிரமமாக இருப்பதாக பொது மக்கள் தொடர்ந்து கோயில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இது குறித்து ஏற்கனவே கடை உரிமையாளர்களிடம் பல முறை அறிவுறுத்தியும் அதனை பின்பற்றாமல் நடைபாதையில் வைத்திருந்த கேஸ் ஸ்டவ், டேபிள், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கோயில் துணை ஆணையர் விஜயா மற்றும் ஊழியர்கள் அதிரடியாக பறிமுதல் செய்து டிரகாக்டரில் ஏற்றிச் சென்றனர். மேலும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்தார். இதனால் திருத்தணி மலைக்கோயிலில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.