பதிவு:2023-03-11 03:11:52
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பங்கேற்பு
திருவள்ளூர் மார்ச் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
மகளிர் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கொடுப்பதற்காக நிறைய பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குடும்பத்தை வழி நடத்தவும், அதே சமயம், நமது அலுவலக பொறுப்புகளில் எந்த குறையும் வரக்கூடாது என்பதற்காக பணிபுரியும் ஒவ்வொரு மகளிரும் மிகப்பெரிய பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தான் ஒவ்வொருவரும் அலுவலகப் பணிகளை செய்து கொண்டு வருகிறீர்கள். எனவே, இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அனைத்து மகளிர் அலுவலர்களுக்கும், பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது அன்பார்ந்த மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கா.காயத்திரி சுப்பிரமணி (பொது), பி.எஸ்.சத்தியகுமாரி (கணக்கு), உதவி ஆணையர் (கலால்) கா.பரமேஷ்வரி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.