புத்தர் ஒளி பண்பாட்டு பேரவை சார்பில் உலக பூமி தினம்

பதிவு:2022-04-25 15:32:06



புத்தர் ஒளி பண்பாட்டு பேரவை சார்பில் உலக பூமி தினம்

புத்தர் ஒளி பண்பாட்டு பேரவை சார்பில் உலக பூமி தினம்

திருவள்ளூர் ஏப்ரல்25, புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை சார்பில் உலக பூமி தினத்தை முன்னிட்டு பிஞ்சிவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுகின்ற அனைத்து பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு புத்தர் ஒளி பன்னாட்டு பேரவை சென்னை கிளையின் துணைத் தலைவரும் பிஞ்சிவாக்கம் நாலந்தா புத்த விஹாரின் நிர்வாகியுமான அம்பேத்ஆனந்தன் தலைமை வகித்தார்.

பிஞ்சிவாக்கம் ஊராட்சித் தலைவர் திருமதி உமாமணிகண்டன் தென்னிந்திய புத்த விகார்ன் ஆலோசகர் ஜெய்பீம்செல்வம் அரக்கோணம் பௌத்த இயக்க அறக்கட்டளை தலைவர் கோவி. பார்த்திபன் ஊராட்சி செயலாளர் திருபுராந்தகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிழல் தரும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் திருமதி புனிதா திருமதி ராஜலட்சுமி மற்றும் சதீஷ் எஸ்வந்த்ஆனந்த் மற்றும் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இறுதியாக பிஞ்சிவாக்கம் உட்கிளை தலைவர் திருமதி சாவித்திரிபாய்பேபி நன்றி கூறினார்.