திருவள்ளூரில் அதிமுக பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் எல்இடி பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினர் அராஜரகத்தில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா குற்றச்சாட்டு

பதிவு:2023-03-13 20:12:10

திருவள்ளூர் மார்ச் 13 : புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 வது ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி நுழைவாயிலில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமையில் நடைபெற உள்ளது. காவல் துறையில் முறையாக அனுமதி பெற்று நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தில் கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான எஸ்.வைகைச்செல்வன் சிறப்புரையாற்ற இருக்கிறார்.

இந்நிலையில் மேடை அமைக்கும் பணியில் அதிமுகவினர் காலை முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுக்கூட்ட மேடை அருகே புரட்சித் தலைவி அம்மா, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர். எல்இடி கட் அவுட் வைக்கும் பணி நடைபெற்று வந்தது. பொதுக்கூட்ட மேடை அருகே எல்இடி கட் அவுட் வைக்க அனுமதி கிடையாது எனக் கூறி திருவள்ளூர் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக அந்த எல்இடி கட்அவுட்டை அகற்ற வேண்டும் என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா காவல் துறையினரின் அராஜகத்தை கண்டிக்கும் வகையில் எஸ்பி யிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முறையான அனுமதி பெற்று பொது மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் திமுகவின் கைப்பாவையாக செயல்படுவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். ஏஎஸ்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்து பணியாற்றுங்கள் என்றும் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் வைக்கப்படும் எல்இடி கட்அவுட்களை நாங்கள் அகற்ற மாட்டோம் என்றும் என்ன வழக்கு வந்தாலும் சந்திக்க தயார் என்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். காவல் துறையினரைக் கண்டித்தும் அதிமுகவினர் கண்டன கோஷம் எழுப்பினார்கள்.