திருவள்ளூர் அடுத்த நயப்பாக்கம் கிராமத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

பதிவு:2023-03-15 09:49:18

திருவள்ளூர் மார்ச் 14 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் புதுவள்ளூர் ஊராட்சிக்குட்பட்ட நயப்பாக்கம் கிராமத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தண்டலம் பகுதியில் உள்ள உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்று பயின்று வருகின்றனர்

இந்த நிலையில் காலையில் பள்ளிக்கு செல்வதற்கு சரியான நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் சுமார் 3 முதல் 7 கிலோமீட்டர் வரையில் மாணவர்கள் நடந்து சென்று பள்ளிகளில் பயில வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கு உரிய நேரத்தில் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 2 மாத காலத்திற்கும் மேலாக மாவட்ட கலெக்டரிடம் பள்ளி மாணவர்கள் நேரடியாக வந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது .

இதனையடுத்து பள்ளிக்கு செல்வதற்கு காலை மாலை வேலைகளில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியரிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்க சென்றனர். ஆனால் காவல் துறையினர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோரிக்கை மனுவை அளிக்க வந்த மாணவ மாணவிகள் திடீரென சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது இதனை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.