பதிவு:2023-03-15 09:51:46
திருவள்ளூர் அருகே நிச்சயம் ஆன துணை சினிமா நடிகையை காதலித்த வாலிபரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் கடலூரில் பதுங்கியிருந்த துணை நடிகையின் அக்கா கணவர் கைது
திருவள்ளூர் மார்ச் 14 : திருவள்ளூர் அருகே நிச்சயம் ஆன துணை சினிமா நடிகையை காதலித்த வாலிபரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் துணை நடிகையின் அக்கா கணவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பம்பை சிந்து நகர் சேக்காடு பகுதியை சேர்ந்த முத்துபிரசாத் (26) சினிமாவில் துனை நடிகராக உள்ளார். இவருடன் துணை நடிகையாக இருக்கும் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்த ஆர்த்தி (25) என்பவர் பூந்தமல்லியில் அவருடைய அக்கா மோனி வீட்டில் தங்கி உள்ளார்.
ஆர்த்திக்கும் ஜெகன் என்பவருக்கும் ஒன்றறை வருடத்திற்கு முன்பே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாத நிலையில் முத்து பிரசாத்தை என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆர்த்தி தனது வீட்டில் காதலை தெரிவித்து ஜெகனுடனான திருமணத்தை நிறுத்தி விடுவதாக தெரிவித்திருந்த நிலையில் காதல் விவகாரம் குறித்து ஆர்த்தி அவரது வீட்டில் தெரிவித்துள்ளார். அவரது வீட்டார் முத்து பிரசாத்திடம் பேச வேண்டும் என அழைத்துள்ளனர். இதனால் பயந்து போன முத்துபிரசாத் வராமல் தவிர்த்தார்.
ஆர்த்தியின் காதல் விவகாரம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட ஜெகன் என்பவருக்கு தெரியவரவே ஆர்த்தியை அடித்து கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக ஆர்த்தி முத்து பிரசாத்திற்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.இது சம்மந்தமாக ஒரு பொது இடத்தில் பேசி செல்லலாம் என கடந்த 7-ந் தேதி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரச் சொல்லி உள்ளனர். அங்கு வந்த முத்துபிரசாத்தையும் அவரது நண்பரையும், அங்கிருந்து காரில் பூண்டி அருகே பென்னாலூர்பேட்டை காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்குமுத்துபிரசாத்தை ஜெகன் மற்றும் ஆர்த்தி அக்காவின் கணவர் பிரதாப் தாக்கி உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் முத்து பிரசாத்தை கட்டை மற்றும் கைகளால் தாக்கி கைகளில் பெட்ரோல் கேன் மற்றும் கத்தி வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அடி தாங்க முடியாமல் முத்துபிரசாத் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்த உள்ளார் இதை அடுத்து முத்து பிரசாத்துடன் சென்ற நண்பர் அரவிந்தன் முத்துவின் சகோதரருக்கு அவர்கள் இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேர் செய்த நிலையில் சந்தேகம் அடைந்த உறவினர்கள் முத்து பிரசாத்தை தேடி வருவது தெரிந்து முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வழிநெடுகிலும் முதுகில் கட்டையால் பலமாக தாக்கிக் கொண்டே வந்து விட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவின் பேரில் அவர்களை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முத்துபிரசாத்தை தாக்கியவர்கள் மீது மாவட்ட எஸ்பி., பா.சிபாஸ் கல்யாணிடம் கொடுத்த புகாரின் பேரில் முதல் கட்டமாக கடலூரில் பதுங்கியிருந்த ஆர்த்தியின் அக்கா கணவர் பிரதாப் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.