மீட்டரில் குளறுபடி செய்து மின்சாரம் திருட்டில் ஈடுபட்ட பள்ளிப்பட்டு பேரூர் திமுக செயலாளரும் பேரூராட்சி துணைத் தலைவருக்கு ரூ.59 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை :

பதிவு:2023-03-15 10:00:11

திருவள்ளூர் மார்ச் 16 : திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூர் திமுக செயலாளராக உள்ள எம்.ஜெ.ஜோதிகுமார் பேரூராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் பள்ளிப்பட்டு பஜார் வீதியில் வசித்து வரும் அவரது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள வீட்டு உபயோக மின்சார மீட்டரில் குளறுபடி செய்து மின்சாரம் திருடி பயன்படுத்தி வருவதாக மின்வாரிய அமலாக்கபிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது மின்சார மீட்டரிலிருந்து நூதன முறையில் மின்சாரத்தை திருடி பயன்ப்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மின்சாரம் திருடிய என்.ஜெ. ஜோதிகுமாருக்கு ரூ. 59,066 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. திமுக பேரூர் செயலாளரும்பேரூராட்சி துனைத் தலைவர் வீட்டு உபயோக மின்சாரத்தை திருடி பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஆனால் அவர் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த செல்வம் என்கிற பலகாரப் பொருட்கள் செய்யும் கடை நடத்தி வரும் செல்வம் என்றவர் இந்த மின் திருட்டில் ஈடுபட்டதாக மின்வாரிய அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.