திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தின்கீழ் பணிகள் துவக்கம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-03-17 19:44:02

திருவள்ளூர் மார்ச் 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டுக்கான பகுதி-II பெரியார் நினைவு சமத்துவபுரம் சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருத்தணி ஊராட்சி ஒன்றியம், வீரகநல்லூர் ஊராட்சியில் 2010-2011-ம் நிதியாண்டில் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள 92 சமத்துவபுர வீடுகள் ரூ.65.97 இலட்சம் மதிப்பீட்டிலும்,5 உட்கட்டமைப்பு பணிகளான சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொது விநியோக கடை கட்டிடம் மற்றும் நுழைவுவாயில் ரூ.15.47 இலட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட உள்ளது.

மேலும், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், தாழவேடு ஊராட்சியில் 2009-2010-ம் நிதியாண்டில் கட்டப்பட்டு பழுதடைந்துள்ள 67 சமத்துவபுர வீடுகள் ரூ.46.15 இலட்சம் மதிப்பீட்டிலும், 7 உட்கட்டமைப்பு பணிகளான குடிநீர் விநியோகம், சாலை, விளையாட்டு மைதானம், பூங்கா, பொதுவிநியோக கடை கட்டிடம், சந்தை, பெரியார் சிலை மற்றும் நுழைவுவாயில் ரூ.52.01 இலட்சம் மதிப்பீட்டிலும் சீரமைக்கப்பட உள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.