செங்குன்றத்தில் 10 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2022-04-25 18:07:46



செங்குன்றத்தில் 10 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

செங்குன்றத்தில் 10 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் ஏப் 25 : தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு கொண்டு, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் வட்டத்திற்குட்பட்ட, செங்குன்றம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கூட்டுப்பண்ணையத் திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.58,52,907 மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை ரூ.50,00,000 மானிய விலையில் 10 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கியும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணித்துறை சார்பாக குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சைப்பயறு கொள்முதல் திட்டத்தினையும் துவக்கி வைத்து, பார்வையிட்டு பேசினார்.

விவசாயிகளின் நலன் கருதி குறைந்தபட்ச ஆதார விலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 வீதம் 300 மெ. டன் பச்சைப்பயறு கொள்முதல செய்ய திருவள்ளூர் மாவட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கிக் கணக்குப்புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்களுடன் திருவள்ளுர் செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பதிவு செய்து 23.04.2022 முதல் 15.05.2022 வரை விற்பனை செய்து பயன்பெறலாம். விளை பொருளுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பச்சைப்பயறு விற்பனை செய்து பயனடையுமாறு பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு பச்சைப்பயறு கொள்முதல் செய்ததற்கான கிரயத் தொகைக்கான ஆணையை அமைச்சர் வழஙகினார்.

இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சு.சுதர்சனம், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குநர் (பொ) எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ராஜேஷ்வரி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.