திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் பட்டப் பகலில் துணை பி.டி.ஓ வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை :

பதிவு:2023-03-17 19:50:04

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் பட்டப் பகலில் துணை பி.டி.ஓ வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை :

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் பட்டப் பகலில் துணை பி.டி.ஓ  வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை :

திருவள்ளூர் மார்ச் 17 : திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் காவல் நிலையம் அருகே சாரதாம்பாள் நகரில் வசித்து வருபவர் கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் பாக்கியவதி என்பவர். இவரது கணவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நிலையில் நேற்று காலை இருவரும் பணிக்குச் சென்று விட்டனர்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற நிலையில் பணி முடிந்து மாலை வீடு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் மணவாள நகர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பீரோவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 15 சவரன் நகை 40 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து மணவாளநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் துணை பி டி ஓ வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு அதிகாரி வீட்டிற்கே விடியா திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.