திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு :

பதிவு:2023-03-18 18:36:00



திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு :

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு :

திருவள்ளூர் அடுத்த காக்களூரில் மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் மீண்டும் மஞ்சப் பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு : :

திருவள்ளூர் மார்ச் 18 : தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டு, பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. :

அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் நிறுவப்பட்டு கலெக்டர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். :

இந்நிலையில் திருவள்ளூர் காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள உற்பத்தியாளர் சங்கம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்தும், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் டி.வாசுதேவன் கலந்து கொண்டு மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர் பி.ரவிச்சந்திரன் மஞ்சப் பை உபயோகம் குறித்து எடுத்துரைத்தார். :

இதில் காக்களூர் சிட்கோ பேட்டை மேலாளர் எம்.மகேஸ்வரி, சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் செயலாளர், கே.பாஸ்கரன் உள்பட 150 நிறுவனங்களை சார்ந்த உரிமையாளர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.