தடம் எண் 572 கே, 505 கே ஆகிய மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் :

பதிவு:2023-03-18 18:38:14



தடம் எண் 572 கே, 505 கே ஆகிய மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் :

தடம் எண் 572 கே, 505 கே ஆகிய மாநகர பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி சிபிஎம் சார்பில்  வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் :

திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணுவாக்கம், பேரத்தூர் ஆகிய கிராமங்கள் வழியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 2012 முதல் 2015 வரை இயக்கப்பட்டு வந்தது. இதனால் திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயனடைந்தனர். பின்னர் திடிரென பேருந்துகள் நிறுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து வசதிகள் ஏதுமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர். :

இந்த நிலையில் 2022 நவம்பர் 30 -ம் தேதி இந்த வழித்தடத்தில் மீண்டும் தடம் எண் 572 கே, 505 கே ஆகிய மாநகர பேருந்துகளை இயங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அடுத்த 10 நாட்களில் சாலைகளை சீரமைத்து பேருந்துகள் இயக்கப்படும் என உறுதியளித்தனர். :

சாலைகள் சீரமைத்து, நான்கு மாதங்கள் கடந்த பிறகும் போக்குவரத்து இயக்கப்படவில்லை. இந்த சூழலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு திருவள்ளூர் வட்ட குழு உறுப்பினர் எஸ்.கலையரசன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் எஸ்.கோபால், கே.ராஜேந்திரன், இ.மோகனா, ஆர்.தமிழ்அரசு, கே.செல்வராஜ், கே.முருகன், ஏ.சுதாகர், ராஜேஷ், சந்துரு, ஒய்.சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநகர போக்குவரத்து ஆவடி மண்டல அதிகாரி எட்வர்ட் பேருந்துகள் இயக்க வாய்ப்பில்லை என தெரிவித்ததால் பேருந்துகளை சிறை பிடிக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர். :

இதனை தொடர்ந்து வட்டாட்சியர் மதியழகன் தலையிட்டு அடுத்த ஒரு வாரத்தில் அந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.