திருவள்ளூரில் 23 மாவட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் : கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர் :

பதிவு:2022-04-25 18:11:10



திருவள்ளூரில் 23 மாவட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் : கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர் :

திருவள்ளூரில் 23 மாவட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் : கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனிடம் விருப்ப மனுக்களை வழங்கினர் :

திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 23 பதவிகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருவள்ளூரில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளரும், செய்தி மக்கள் தொடர்பாளருமான சி.பொன்னையன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா விருப்ப மனுவை கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையனிடம் வழங்கினார். அதே போல் மற்ற பதவிகளுக்கும் அதிமுகவினர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவிர்த்து மற்ற 8 பதவிகளுக்கு 13 பேர் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன், தமிழகத்தில் கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் வழியில் வந்த புரட்சித் தலைவி அம்மா, மற்றும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆகியோரின் நல்லாட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலத்திலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடம் வகித்தது என்றும், தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை அனுப்பும் வகையில் சிறப்பாக அதிமுக அரசு செயல்பட்டது என்றார்.

ஆனால் தற்போது திமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதலி்ல் ஊழல் ,விநியோகத்தில் ஊழல் என திமுக திளைத்திருப்பதால் மின்வெட்டு அதிகளவில் ஏற்பட்டு,. விவசாயம் மற்றும் சிறு குறு தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியதாகவும், புரட்சித் தலைவி அம்மாவே அவரை வீட்டை விட்டு விரட்டப்பட்டவர் என்றும், அவர் அதிமுகவில் உறுப்பினரும் இல்லை பொறுப்பிலும் இல்லை என்றும் சசிகலைவை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் உட்பட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.