திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார் :

பதிவு:2023-03-18 18:40:14

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார் :

திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக உறுப்பினர்கள் புதிய அடையாள அட்டை : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார் :

திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில்நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். :

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கோ.குமார், மாதவன், சூரகாபுரம் சுதாகர், இ.என்.கண்டிகை ரவி, ட்டீ.டி.சீனிவாகன், சாந்தி பிரியா சுரேஷ், நகர செயலாளர்கள், சௌந்தர்ராஜன், ஜி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல் கட்டமாக திருவள்ளூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட 6 ஒன்றியம், 2 நகரம், 2 பேரூர் கழக நிர்வாகிகளுக்கு இந்த புதிய அடையாள அட்டையை முன்னாள் அமைச்சர் பி வி ரமணா வழங்கினார். :

அதனைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அனைத்து அதிமுக உறுப்பினர்களுக்கும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி படம் பொறித்த அடையாள அட்டையை 40 ஆயிரம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார்.இதில் நிர்வாகிகள் வேல்முருகன், எழிலரசன், துக்காராம், ஜோதி, ராஜீ, தியாகு, சித்ரா விஸ்வநாதன், ரவி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.