பதிவு:2023-03-18 18:42:10
திருவூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி :
திருவள்ளூர் மார்ச் 18 : திருவூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அங்கக வேளாண்மைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பானுமதி அங்கக வேளாண்மையில் முக்கியத்துவம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையத்தின் செயல்பாடுகள் குறித்து துவக்க உரையாற்றினார்
:
அதனைத் தொடர்ந்து வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் பெ.சாந்தி, அங்கக வேளாண் விளைபொருட்களுக்கான நன்மைகள் குறித்தும், நஞ்சில்லா உணவை உட்கொள்வதால் ஏற்படும் பலன்கள் குறித்து பேசினார்.
:
பின்னர் காணொளி வாயிலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக, விரிவாக்க கல்வி இயக்குநர் பொ.முருகன், அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்புகள், செயல்பாடுகள் மற்றும் அங்கக வேளாண்மையால், சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பேசினார்.
:
அதனையடுத்து, நம்மாழ்வார் இயற்கை வேளாண் மையத்தின் பேராசிரியர் இராமசுப்பிரமணியன் மையத்தின் செயல்பாடுகள், அங்கக வேளாண் இடுபொருட்கள் குறித்து விளக்கினார்.
:
பின்னர் விஞ்ஞானிகள் வி.ஏ விஜயசாந்தி,டி.எல்.ப்ரீத்தி, சிவகாமி, செந்தில்குமார் ஆகியோர் தொழில்நுட்ப உரை மற்றும் அங்கக வேளாண் இடுப்பொருட்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.