பதிவு:2023-03-18 18:44:19
ஆவடி முதலாவது புத்தகத் திருவிழாவில் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ர்ஏகு மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா 2023 மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெறும் “ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாண்டி” என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியையும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பார்வையிட்டு பேசினார்.
:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் மக்களிடையே வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருக்க வேண்டும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகவும், அனைத்து துறைகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த புத்தக திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
:
இந்த புத்தக திருவிழாவில் 120 அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அனைத்து வகையான புத்தகங்களும் உள்ளது. இந்த புத்தகங்ளை மக்கள் வாங்கி சென்று பயனடைய வேண்டும். இந்த 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பலதரப்பட்ட சிந்தனையாளர்கள, சொற்பொழிவாளர்கள், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் என மாலை நேரங்களில் நடத்தப்படவுள்ளது. இதன் மூலம் மக்களிடையே கல்வி கண் திறக்க வேண்டும் வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும், அpறிவுப்பசி தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் மக்களின் அறிவாற்றல் பெருகும்.
:
எனவே, தமிழ்மொழியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகள் அடங்கிய புத்தக திருவிழாவை நாமும், நம்மை சார்ந்தவர்களும் அனைவரும் வந்து அறிவுப்பசியை தீர்த்துகொள்ள வேண்டும். நமக்கு அறியாத, தெரியாத, புரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
:
அதனைத் தொடர்ந்து, ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழரின் கனவுகளை தாண்டி” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெறும் புகைப்படக் கண்காட்சியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து, கண்காட்சி அரங்கை பார்வையிட்டார்.பின்னர் புகைப்படக் கண்காட்சியில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும வகையில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் திரையிடப்பட்ட காணொளியையும், செய்தி மக்கள் தொடாபு துறை சாhபபக அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும வகையில் நடைபெறும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியும் பால்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.
:
இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி க.தர்ப்பகராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கூ.பாபு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.வைரவன், துணைத் தலைவர் பெ.மயிலவேலன், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.