பதிவு:2023-03-21 09:27:07
பட்டாபிராமில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 672 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
திருவள்ளூர் மார்ச் 20 : திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 179 நிறுவனங்களும், 8 திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டனர். இத்தனியார் வேலைiவாய்ப்பு முகாமில் 5071 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் தேர்வு செய்யப்பட்ட 672 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், முதல் நிலை பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்விற்கு தகுதி பெற்றுள்ள 494 நபர்களுக்கு ஆணைகளையும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பெருமுயற்சியால் வேலைவாய்ப்பு அலுவலகம மூலம் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2022-2023-ம் நிதியாண்டில் 1,171 பயனாளிகளுக்கு ரூ.56,00,100 உதவித்தொகையாக இவ்வலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டிற்கு மேலாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழான கல்வித்தகுதிக்கு மாதம் ரூ.600 மேல்நிலை கல்வித்தகுதிக்கு மாதம் ரூ.750 மற்றும் பட்டப்படிப்பிற்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக பத்து வருடங்களுக்கு வழங்கப்படுகிறது. 2022-2023-ம் நிதியண்டில் 950 மாற்றுத்திறனாளிக்கு ரூ.77,44,500 உதவித்தொகையாக இவ்வலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இம்மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 50 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம் ரூ.41.75 இலட்சம் மதிப்பீட்டிலான மோட்டார் சைக்கிள்களை பால்வளத்துறை அமைச்சர் பயனாளிகளுக்கு இலவசமாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்.
இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் கா.விஜயா, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ரவீந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொ) காமராஜ், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து கல்லூரி இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் கல்விக்கரசி, உதவி திட்ட அலுவலர்கள் கல்பனா, சந்திரசேகர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து கல்லூரி இயக்குனர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் கல்விக்கரசி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முடநீக்கு வல்லுநர் ஆஷா மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.