பதிவு:2023-03-21 09:30:24
பூண்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சமபந்தி போஜனம்- 100 மலைவாழ் பெண்களுக்கு இலவச சேலை : மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்
திருவள்ளூர் மார்ச் 21 : தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் சமபந்த போஜனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், பூண்டி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சமபந்தி போஜனம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பூண்டியில் உள்ள மலைவாழ் மக்கள் 100 பேருக்கு இலவச சேலையையும் வழங்கினர்..
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் காஞ்சிப்பாடி சரவணன், சௌக்கார் பாண்டியன், சிட்டிபாபு , பட்டரை பாஸ்கர், பூணடி ரமேஷ், எல். மோகன், ஜி.கணேஷ் , வக்கீல் கார்த்தி, மீன் ஜெயபால், ரகுபதி, பி.கிருபானந்தம், பங்காருபேட்டை பழனி, ரங்காவரம் பொன்னுசாமி உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். .
முன்னதாக திமுக பிரமுகர் சங்கர் மறைவையொட்டி அவரது திருவுருவப் படத்தை மேற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏ.வுமான எஸ்.சந்திரன் மற்றும் திருவள்ளூர் எம்எல்ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து பூண்டி பேருந்து நிலையத்தில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறை வளாகத்தையும் திறந்து வைத்தனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பூண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா ரமேஷ் செய்திருந்தார்.