வெங்கல் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை கத்தியால் வெட்டிவிட்டு ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் பணம் 1 லட்சத்து 12 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் ஓட்டம் : போலீசார் விசாரணை

பதிவு:2023-03-21 21:06:22

திருவள்ளூர் மார்ச் 21 : திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணிபாட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் மதுரவாயல் ஆர்எல். ஜுவல்லரி என்ற கடையிலிருந்து காலை நகை மூக்குத்தி 400 கிராம், சில்லரை நகை 700 கிராம் மோதிரம் கம்மல் 400 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு நெற்குன்றத்தைச் சேர்ந்த காலு ராம், மற்றும் சேஷாராம் ஆகிய இருவரும் நெற்குன்றத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா நகை கடைக்கு சென்று 10 கிராம் மூக்குத்தி கொடுத்துவிட்டு அதற்காக 50 ஆயிரம் பணம் பெற்றுள்ளனர்.

அதை வாங்கிக் கொண்டு செம்பரம்பாக்கம் சென்று அங்குள்ள மாதாஜி கடையில் 7000 பணம் வாங்கியுள்ளனர். அதனையடுத்து அங்கிருந்து திருநின்றவூர் அடுத்த பாக்கம் பகுதியில் உள்ள குஷ்பு நகை கடையில் 25 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து தாமரைப்பாக்கம் ரோஷன் ஜுவல்லரிக்கு வந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தாமரைபாக்கத்திலிருந்து ரெட்டில்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது காரணிபாட்டை என்ற இடத்தில் செல்லும் பொழுது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் காலுராம் மற்றும் சேஷாராம் இருவரையும் மடக்கி கத்தியை காட்டி கையில் வைத்திருந்த பையை கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஆனால் கையில் வைத்திருந்த பையை கொடுக்காததால் பின்பக்கமாக அமர்ந்து வந்த காலு ராம் என்பவரை இடது பக்க ஆள்காட்டி விரலில் கத்தியால் வெட்டி விட்டு பையை பிடுங்கிக் கொண்டு அங்கு இருந்து 4 பேரும் தப்பிச் சென்றனர். இது குறித்து காலுராம், சேஷாராம் ஆகியோர் மதுரவாயலில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகை கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்துவிட்டு, அதில் வசூலான பணத்தையும் மீதி நகையையும் எடுத்து சென்ற போது ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ஆகியவற்றை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துச்சென்றதாக கொடுத்த புகாரின் பேரில் வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.